May 05, 2018

லலிதா சஹஸ்ர நாமம் 291-300



பஞ்ச ப்ரம்ம ஸ்வரூபம்

புருஷார்த்த ப்ரதா;

பூர்ணா;

போகினீ;
புவனேஸ்வரீ;
அம்பிகா;
அனாதி நிதனா;
ஹரி ப்ரம்மேந்திர சேவிதா;
நாராயணீ;
நாத ரூபா;
நாம ரூப விவர்ஜிதா;


() புருஷார்த்த = மனித இலக்குகள் 
ப்ரதா = வழங்குபவள்


#291 புருஷார்த்த ப்ரதா = மனிதக் குறிக்கோளுடன் தொடர்புடைய தேடல்களின் பலா-பலன்களை அருள்பவள் *

மனிதனின் செயல்கள் நால்வகை நோக்கங்களுடன் அமைகிறது. தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்ற நால்வகைக்குள் அவை அடங்கிவிடுவன.


தர்ம- புண்ய காரியங்களின் ஈடுபடுவது, கொண்ட கடமைகளை ஆற்றுவது 
அர்த்த - பொருளீட்டுதல், சொத்து சேர்த்தல்
காம - ஆசைகள், அபிலாஷைகள், இன்பத்திற்காக முனைவது
மோக்ஷ - வீடுபேறு என்ற இறுதி இலக்கிற்கு உரிய பயணம்

இவை அனைத்தையும் அருள்பவள்.

#292 பூர்ணா = முழுமையானவள் (குறைபாடு அற்ற) - பூர்ணத்துவம் நிறைந்தவள் *

பூர்ணத்தைப் பற்ரிய வேத மந்திரம்:
ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதஸ்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே  


அது பூரணமானது-முழுமையானது. இதுவும் பூரணமானது. அதனிலிருந்து இது தோன்றியது.  அதனிலிருந்து இதனை எடுத்தாலும், கழித்தாலும் எஞ்சி இருக்கும் அது சாஸ்வதப் பூர்ணமாகவே விளங்கும்.
அது என்பது பிரம்மத்தையும், இது என்பது சிருஷ்டி, பிரபஞ்சம் மற்றும் ஜீவாத்மாவைக் குறிக்கிறது. 

#293 போகினீ = துய்ப்பவள் ; அனுபவிப்பவள்; நுகர்பவள் *

இவ்விடத்தில் சுகிப்பது என்பது சுகபோகங்கள் என்றல்லாது அனைத்து அனுபவங்களிலும் திளைப்பது என்ற பொருளில் வரும். அவள் விளையாட்டை உருவாக்குகிறாள். ஆடுகிறாள். அவளே வெற்றிக் கொண்டாடுகிறாள். துவண்டு தோற்கிறாள்.  பிரபஞ்ச விளையாட்டில் மூழ்கித் துய்க்கிறாள். அவளே இந்த லீலைகளை அவதானிப்பவளாகவும் இருக்கிறாள்.

#294 புவனேஸ்வரீ = சகல புவனங்களையும் ஆளுபவள்

#295 அம்பிகா = பிரப்ஞ்சத் தாயானவள்

() அனாதி = ஆதி இல்லாத
நிதனா = அந்தம் இல்லாத


#296 அனாதி நிதனா = ஆதி அந்தம் இல்லாத சாஸ்வதமானவள்

#297 ஹரி ப்ரமேந்திர சேவிதா = ஹரி, பிரம்மா, இந்திரர்களால் தொழுது வணங்கப்படுபவள்

#298 நாராயணீ = நாராயண அம்சத்தின் பெண்வடிவம் *

நார எனும் சொல் மனிதனைக் குறிக்கும் ஆயன என்றால் தோன்றுதல் / வருதல் என்றும் பொருள் அவளிலிருந்து புறப்பட்டு வந்த இந்த சிருஷ்டிக்கு அவளே அன்னை. அவள் நாராயணீ. 
#299 நாத ரூபா = ஒலி (நாதம்) வடிவானவள் (பிரபஞ்சத்தின் முதல் ஒலி, ஓம் என்னும் நாதம்) 

() நாம = பெயர் / அடையாளம்
ரூப = வடிவங்கள்

விவர்ஜிதா = அற்ற - இல்லாத

#300  நாம ரூப விவர்ஜிதா = வடிவ அடையாளங்களுக்கு அப்பாற்பட்டவள்


(தொடரும்) 


Lalitha Sahasranama (291-300) 

Pancha Brahma Swaroopam


Purushaartha pradha;
Poorna;
BhvanEshwari;
Ambika;
Anaadhi nidhana;
Hari brahmendra sEvitha;
Narayani;
Naadha roopa;
Naama roopa vivarjitha;


() purusha-artha = aim of human existence - human objectives * 
pradha = giver


#291 Purushaartha Pradha = Who confers the fruits of human pursuits *

*purushaartha is mentioned to be four types.Human objective is to seek fulfillment and happiness which basically falls under one of the four categories, ie. Dharma-artha-kama-moksha.
Dharma - duties and duty-bound acts and behaviours
artha - acquisition of wealth and related actions
kaama - desires and pleasures
moksha - liberation.


#292 Poorna = Who is Complete(without defect) - the Whole -the totality *

There is a Vedic mantra:

Om poornamadah poornamidam poornaat poornamudachyate
Poornasya poornamaadaaya poornamevaavashishyate


That is complete and perfect. This is complete and perfect. From that fullness comes this fullness. From 'that' infinite -totality, after removing i.e. taking / creating 'this',  'that' totality continues to remain total and infinite.

'That' here refers to the totality (brahmam) . 'This' refers to jiva or creation.


#293 Bhogini = She who is the Enjoyer *

Enjoyer here refers not material luxuary, but is deemed to mean who goes through every experience.  She creates the sport, plays the sport, watches the game. She wins, she loses. she immerses herself in sport or lila of her creation and is the enjoyer.


#294 BhuvanEshwari = Who rules the universe

#295 Ambika = Who is the mother of the universe

() Anaadhi = beginningless -eternal 
Nidhana = cause - cessation or end

#296 Anaadhi Nidhana = She who is perpetual - immortal


#297 Hari BrahmEndra Sevitha = Who is served and worshipped by SriHari, Brahma and Indra


#298 Narayani = Who is the female aspect of Narayana *

Nara may mean mortal or men. aayana is arrival. It is from her the creation has sprung, she is the mother, she is Narayani.

#299 Naadha Roopa = Who is in the form of sound (music) ( om is the first music)

() Naama = name
Roopa = form
Vivarjitha = without


#300 Naama Roopa Vivarjitha = Who is devoid of name and form

(to continue) 

No comments:

Post a Comment