January 19, 2018

Lalitha Sahasranama (152 - 163) தமிழ் விளக்கத்துடன்




NirguNa upasana

NishkaaraNa;
NishkaLanka;
Nirupaadhi;
Nireeshwara;
Niraaga;
Raaga-mathani;
NirMadha;
MadhaNashini;
Nishchintha;
NirAhankaara;
NirMoha;
MohaNashini;


() kaaraNa = reason - cause
# NishkaaraNa = She who is without cause - Primary origin who needs no cause

() kaLanka = stain - dishonour
# NishkaLanka = Who is flawless

() upaadhi = quantification - qualification - limitation - attribute
# Niroopaadhi = Who is infinite - who is limitless - who cannot be defined

() ishwara = Supreme being - superior - the Master - Lord
# Nir-Ishwara = She who has none superior - ie. She who is the Supreme power

() raaga = desire - sense gratification - colored
# Niraaga = Who is beyond desire or gratification of desires

() Mathana = to destroy
# RaagaMathani = Who destroys the passion ie. wordly attachment/desires (of her devotees)

() Madha = Pride - arrogance
# NirMadha = She who is without pride

# MadhaNashini = she who destroys pride
() Chintha = worry - anxiety

# Nishchintha = Who is without anxiety or worry
() Ahankaara = Ego (arising from senses and three gunas)

# Nirahankara = Who is devoid of Ego
() Moha = distraction - confusion - delusion
# NirMoha = Who is free from illusions - who is un-clouded

# Mohanaashini = Who destroys deceptions and delusions of her devotees

* Note: It is to ber undestood her NirguNa qualities are spoken from the highest state of prescence equating her state of existence as to that of parabrahman or root-cause.

(to continue)

லலிதா சஹஸ்ரநாமம் (152 - 163)

நிர்குண உபாசனை

நிஷ்காரணா;
நிஷ்களங்கா;
நிரூபாதி;
நிரீஷ்வரா;
நீராகா;
ராகமதனீ;
நிர்மதா;
மதநாசினீ;
நிஷ்சிந்தா;
நிர்அஹங்காரா;
நிர்மோஹா;
மோஹநாசினீ;


() காரண = காரணம் - ஆதாரம்
#152 நிஷ்காரணா = முதன்மையானவள் - மூலமாக திகழ்பவள் ( இருப்புக்கான காரணம் அற்றவள் )

() களங்க = மாசு - கறைபடிதல்
#153 நிஷ்களங்கா - குறைபாடற்ற முழுமைத்தன்மை உடையவள்

() உபாதி = தகுதி - நிர்ணயம் - வரம்பு - பண்பு - ஏற்றிக்கூறல்
#154 நிரூபாதி = வரையரறையற்றவள் - எல்லையற்று எல்லாமாகவும் விளங்குபவள்

() ஈஷ்வர = தலைவன் - முதலானவன் - இறைவன்
#155 நிரீஷ்வரா = தனக்கு அப்பாற்பட்ட தலைமை இல்லாதவள்

() ராக = ஆசைகள் - அபிலாஷைகள் - புலனின்பத்திற்கு உரியவை
#156 நிராகா = புலன்களின் இச்சைகளுக்கு கட்டுப்படாதவள்

() மதன = அழித்தல் - நாசமாக்குதல்
#157 ராகமதனீ = லோகாபிலாஷைகளை அழித்து ரக்ஷிப்பவள்

() மதா = தற்பெருமை - ஆணவம் - கர்வம்
#158 நிர்மதா = செருக்கு அற்றவள்

#159 மதநாசினீ = கர்வத்தை அழித்தொழிப்பவள்

() சிந்தா = கவலை - பதட்டம்
#160 நிஷ்சிந்தா = உளைச்சலற்ற தெளிந்த சிந்தனையுடையவள்

() அஹங்கார = மமதை
#161 நிரஹங்காரா = அஹங்கார மமகாரங்கள் அற்றவள்

() மோஹ = மாயை - குழப்பம் - கவனச்சிதறல்
#162 நிர்மோஹா = மாயைகளுக்கு அப்பாற்பட்டவள்

#163 மோஹநாசினீ = மோக-மாயைகளை நாசம் செய்பவள் (தன்னை சரண் புகுதவர்களுடைய)

* குறிப்பு: நிர்குணப் பெயர்கள், அம்பாளின் உயரிய இருப்பு நிலை, தெய்வ நிலை இருப்பை உணரந்து சொல்லக்கூடியவை. அவளே பரப்ப்ரம்ம ரூபிணி, காரண காரியமாக விளங்குபவள் என்ற நிலையில் உணரப்படுபவை.

(தொடர்வோம்)

No comments:

Post a Comment