November 09, 2017

Lalitha Sahasranama (76 - 79) (தமிழ் விளக்கத்துடன்)



Slaying of Bhandasura


Vishukra praana harana vaarahi veerya nandhitha;
Kameshwara mukhaaloka kalpitha Sri Ganeshwara;
Mahaganesha nirbhinna vignayanthra praharshitha;
Bhandhasurendra nirmuktha shastra prathyasthra varshini;


() Vishukra = Brother of Bhandasura
PraaNa = life force - breath
HaraNa = to stop - kill - removing
vaaraahi = Devi Vaaraahi (Dhandanatha) 
veerya = strength - heroism
nandhitha = pleased - gratified


# Vishukra praaNa HaraNa vaaraahi veerya nandhitha = Who is pleased with vaarahi's Bravery for slaughtering Vishukra

() KameShwara = Lord Kameshwara
mukha = face ; 
aloka = to view - look
kalpitha = invented - made- conceptualize
Shri Ganeshwara = Lord Ganesh


# Kameshwara mukhaaloka kalpitha shri Ganeshwara = She who merely glanced the face of Lord Kameshwara to create Shri Ganesh (i.e. she conceptualized Kameshwara to create Ganeshwara)

() MahaGanesha = Lord Ganesh
Nirbhinna = destroy - broke apart
vigna = trouble or disruption
Vignayanthra = yanthra created by Vishukra
praharshitha = very happy - greatly delighted


# Maha Ganesha Nirbhinna vigna yanthra praharshitha = Who was enraptured when Lord Ganesh smashed apart Vigna-yantra ( yanthra craeted by vishukra)

() Indra = best - chief - prime 
Bhandasurendra = Bhandasura the chieftain 
nirmuktha - give up - to lose
shastra = A type of weapon used in warfare - sword etc (hand held weapons) 
prathya = every - each and every 
asthra= Kind of weapon used in warfare - missiles 
Varsha = raining - pouring


# Bhandasurendra nirmuktha shastra prathyastra varshini = Who made Bhandasura helpless by 
showering weaponry countering every attack of him.


Note: There is a disagreement between devotees regarding the precedence of Karthikeya aka murugan with Sri Ganesh. In south there is a wide belief Sri Ganesh is the elder amongst the two. When we analyse if Bhadasura's death occured before Tarakasur, we may find an answer. There is a legendary story which says when Shiva beheaded the most beautiful Sri Ganesh, Karthikeya was present in his army.


*******************************

லலிதா சஹஸ்ரநாமம் (76-79)




பண்டாசுர வதம்

விஷுக்ர ப்ராண ஹரண வாராஹி வீர்ய நந்திதா;
காமேஷ்வர முகாலோக கல்பித ஸ்ரீகணேஷ்வரா;
மஹாகணேஷ நிர்பின்ன விக்னயந்த்ர ப்ரஹர்ஷிதா;
பண்டசுரேந்த்ர நிர்முக்த ஷஸ்த்ர ப்ரத்யஸ்த்ர வர்ஷிணி;


() விஷுக்ர = பண்டாசுரனின் சகோதரன் விஷுக்ரன்
ப்ராண = ப்ராணன்- ஜீவன்
ஹரண = நிறுத்துதல் - களைதல்
வாராஹீ = தேவி வாராஹி (தண்டநாதா)
வீர்ய = பலம் - வலிமை
நந்திதா = அகமகிழ்தல்


# விஷுக்ர ப்ராண ஹரண வாராஹீ வீர்ய நந்திதா = விஷுக்ரனை வீழ்த்திய வாராஹியின் வீரச்செயலால் உவகை கொண்டவள்

காமேஷ்வர = காமேஷ்வரன் - ஷிவன் - இறைவன்
முகா = முக
ஆலோக = பார்வை - பார்த்தல் - 
கல்பித = உருவாக்குதல் - செய்தல்
ஸ்ரீகணேஷ்வரா = கணேஷ்வரர் - பிள்ளையார்


# காமேஷ்வர முகாலோக கல்பித ஸ்ரீகணெஷ்வரா = இறைவன் காமேஷ்வரனின் முகலாவண்யத்தை காணுற்று அவ்வாறே கணேஶ்வரரை ஸ்ருஷ்டித்தவள்

மஹாகணெஷ = மஹாகணபதி - பிள்ளையார்
நிரபின்ன = அழித்து - உடைத்தெறிந்து 
விக்ன = விக்னங்கள் - முயற்சித் தடை - காரிய தடை - பிரச்சனை
விக்ன யந்த்ர = விஷுக்ரனால் உருவாக்கப்பட்ட யந்திரம்
ப்ரஹர்ஷிதா = குதூகலித்தல் - மகிழ்தல்


# மஹாகணேஷ நிர்பின்ன விக்னயந்த்ர ப்ரஹர்ஷிதா = விஷுக்ரன் உருவாக்கிய விக்னயந்திரத்தை ஸ்ரீ கணேஷ்வரர் நிர்மூலமாக்கியதால் குதூகலித்தவள்

() இந்திர = சிறந்தவன் - முதன்மையான - தலைவன்
பண்டாசுரேந்திர - பண்டாசுரன் எனும் படைத்தலைவன்
நிர்முக்த = இழப்பு - பிடி நழுவிப்போதல்
ஷஸ்த்ர = ஷஸ்திரங்கள் - வாள், வேல் முதலிய ஷஸ்திரங்கள் 
(கையாளப்படும் ஷஸ்திரம்)
ப்ரத்ய = ஒவ்வொரு
அஸ்த்ர = அஸ்திரங்கள் - விட்டெறிந்து போரிடும் ஆயுதங்கள் - ஏவுகணைகள் 
வர்ஷ = பொழிதல் - வர்ஷித்தல்


# பண்டாசுரேந்திர நிர்முக்த ஷஸ்த்ர ப்ரத்யஸ்த்ர வர்ஷிணி = பண்டாசுரனின் ஒவ்வொரு சஸ்திர-அஸ்திரத்தையும் தனது ஆயுதமழையால் முறியடித்து  நிர்கதியாக்கியவள்

குறிப்பு: வடக்கிந்திய பக்தர்கள் கார்த்திகேயன் எனப்படும் முருகனை மூத்தவனென்றும் பிள்ளையாரை இளைவர் என்றும் கருதுகின்றனர். தெற்கில் இதற்கு நேர்மாறான கருத்து. பண்டாசுர வதம் தோன்றிய பின்னர் தாரகாஸுரனின் அழிவு ஏற்பட்டதால் என்பதை ஆராய்ந்தால்  இதற்கு  விடை கிடைக்கலாம். மேலும், அனைவரையும் மயக்கும் அழகு முகம் கொண்ட பாலகனாக விளங்கிய வினாயகரை சூலம் கொண்டு சிரசை சிவன் வீழ்த்திய போது அப்படையில் கார்த்திகேயன் என்ற முருகரும் இருந்ததாக கூறுவர்.

No comments:

Post a Comment