November 03, 2017

Lalitha Sahasranama (58 - 63) தமிழ் விளக்கத்துடன்

Lalitha Sahasranama (58 - 63)





Pancha brahmasana sthitha;
Mahapadmatavi samstha;
Kadhamba vana vaasini;
Sudha Saagara Madyastha;
Kaamakshi;
Kaamadhayni;

() pancha = five in number
brahmaasana = seat of chief person = seated in the posture of chief person
Sthitha = is present - being - existing

# 58 Pancha Brahmasana sthitha = Seated on the throne made of 'aspects of creations' or five 'aspects of brahman' *Note

() Maha- great - big
padhma - lotus
atavi - forest
Samstha - stay - to be

# 59 Mahapadmatavi Samstha - She who is resides in vast extensive lotus-forest

() Kadhamba vana = Forest of Kadhamba trees
Vasi = to reside - native

# 60 Kadhamba vana vasini = She who dwells in kadamba forest

கதம்பமலர் - kadhamba flower

() Sudha - nector - juice
Saagara = river - ocean- sea
Madhya = in the middle
stha = stays put - exists

# 61 Sudha saagara madhyastha = Who is present in the center of the 'ocean of nector'

() Kama = desire- wish - love
akshi= eyes

# 62 Kamakshi = whose eyes emits love

() Kaama= desire - wish
dhayi = grant - give - to yield

# 63 Kaamadhayini = She who grants or fulfills desires.

Note: Pancha brahma can be understood as aspects of creation. Some prefer to meditate the same as pancha bhoothas (air, water, fire, ether and earth) and she the controller of pancha bhoothas from  which creation emerge. Some personify the five aspects of creation and sustenance i.e. Creation- sustenance- destruction - dissappearance or removal - grace ) as - Brahma, vishnu, Rudhra, Isaana, Sadashiva. Devi Lalitha rules is seated on these and rules over these aspects.



***************************************************************************

லலிதா சஹஸ்ர நாமம் (58-63)


பஞ்ச ப்ரஹ்மாஸன ஸ்திதா;
மஹாபத்மாடவி சம்ஸ்தா;
கதம்பவன வாஸினி;
சுதா சாகர மத்யஸ்தா;
காமாக்ஷி
காமதாயினி;

() பஞ்ச = ஐந்து - ஐந்தாக
ப்ரஹ்மாஸன = அரியணை = தலைமை பதவி - சிம்மாசனம்
ஸ்திதா = இருத்தல்

# 58 பஞ்ச ப்ரஹ்மாஸன ஸ்திதா = பிரபஞ்ச படைப்பின் லக்ஷணங்களை / அதன் ஐந்து தன்மைகளை அரியணையாக ஏற்று கொலுவிருப்பவள் *குறிப்பு

() மஹா = பெரிய - மேன்மை பொருந்திய
பத்ம = தாமரை
அடவி = காடு - வனம்
ஸம்ஸ்தா = இருப்பவள்

# 59 மஹாபத்மாடவி சம்ஸ்தா = தாமரைமலர்கள் நிறைந்த பரந்த வனத்தில் குடியிருப்பவள்

() கதம்ப வன = கதம்ப மரங்களின் வனம்
வாஸி = தங்கி இருத்தல் 

# கதம்பவன வாஸினி = கதம்ப மரங்களால் சூழப்பட்ட பூவனத்தில் வசித்திருப்பவள்

() சுதா = தேன் - சாறு
ஸாகர = சாகரம் - கடல் - ஆறு
மத்ய - நடுவில் - இடையே
ஸ்தா = இருப்பவள்

# 60 சுதா சாகர மத்யஸ்தா = தேனாற்றின் (கடலின்) நடுவில் வாசம் செய்பவள்

() காம = ஆசை - இச்சை - அன்பு
அக்ஷி = கண்கள்

# 61 காமாக்ஷி = அன்பைப் பொழியும் விழியாள்

() காம = விருப்பம் = இச்சை
தாயி = கொடுப்பது

# 62 காமதாயினி = இச்சைகளை பூர்த்தி செய்பவள்

குறிப்பு: பஞ்ச ப்ரஹ்மத்தை ஆசனமாக கொண்டு ஆட்சி புரிகிறாள். பஞ்ச ப்ரஹ்மம் என்பது எதனைக் குறிக்கிறது என்பது அவரவர் புரிதலுக்கேற்ப மாறுபடுகிறது.  சிலர் பஞ்ச பூதங்களை ( நிலம், நீர், பூமி, காற்று மற்றும் ஆகாயம்) குறிப்பிட்டுள்ளதாக கூறுவதுண்டு. பிரபஞ்ச படைப்பு ஐந்து தன்மைகள் கொண்டதாக  விளக்கம். ஸ்ருஷ்டி (படைப்பு) - ஸ்திதி (காத்தல்) - ஸம்ஹாரம் (அழித்தல்) - மறைத்தல் மற்றும் அருளல், இவற்றை முறையே ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன், சதாசிவன் என்பவர்கள் பிரதிபலிப்பதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தேவி காமாக்ஷி இந்த ஐந்து தன்மைகளை தன் ஆசனமாக ஏற்றதன் மூலம் அவற்றை ஆள்பவளாக சஹஸ்ர நாமம் உணர்த்துகிறது.



(இத்துடன் ஸ்ரீநகர வர்ணனை நிறைவு பெற்று பண்டாசுர வதம் தொடர்கிறது)

Thanks and credits: sansrkitdictionary.com Spokensanskrit.org manblunder.com

No comments:

Post a Comment