November 22, 2017

லலிதா சஹஸ்ர நாமம் ((97- 106) (with English meanings)

லலிதா சஹஸ்ர நாமம் ((97- 106) (with English meanings)







மந்திர ரூபம்

சமயாந்த:ஸ்தா;
சமயாசார தத்பரா;
மூலாதாரைக நிலையா;
ப்ரஹ்மக்ரந்தி விபேதினி;
மணிபூரந்தருதிதா;
விஷ்ணுக்ரந்தி விபேதினி;
ஆக்ஞா சக்ராதராலஸ்தா;
ருத்ரக்ரந்தி விபேதினி;
சஹஸ்ராரம்புஜாரூடா;
சுதாசாராபி வர்ஷிணி;

() சமயா = சமயாசார நெறிமுறைகளும் வழிபாடும்
அந்த:ஸ்தா = உள்ளுறைபவள்

# 97 சமயாந்த:ஸ்தா = சமயாசாரத்தின் வழிபாட்டு முறைகளுள் உறைபவள் (ஸ்ரீவித்யா உபாசனை முறையில் சமயாசார முறையும் ஒன்று. )

() சமயா = சமயாசார நெறிமுறைகளும் வழிபாடும்
ஆசார = மரபாச்சார பழக்க வழக்கங்கள்
தத்பரா = பிடித்தமான

# 98 சமயாசார தத்பரா = சமயாச்சார வழக்க முறைகளிலும் வழிபாடுகளிலும் ஈடுபாடு உடையவள்

() மூலாதார = மூலாதார சக்கரம் 
மூலாதாரைக = மூலாதாரத்தில்
நிலயா = இருப்பவள்

# 99 மூலாதாரைக நிலயா = மூலாதார சக்கரத்தில் நிலை கொண்டுள்ளவள் (மூலாதாரம் முதுகெலும்பின் அடிப்பாகத்தில் அமைந்துள்ளது)

() க்ரந்தி = முடிச்சு
ப்ரஹ்ம க்ரந்தி = மூலாதாரத்தின் ஆதார தேவதா தத்துவமாக பிரஹ்மா திகழ்கிறார்.
விபேதினி = துளைத்து

# 100 ப்ரஹ்மக்ரந்தி விபேதினி = ப்ரஹ்மக்ரந்தி எனும் நாடி-முடிச்சுத் தளைகளை துளைப்பவள் (ப்ரஹ்மக்ரந்தி மூலாதாரத்திற்கும் சுவாதிஶ்டானத்திற்கும் நடுவில் இருப்பதாக யோக சாஸ்திரம் கூறுகிறது)

() மணிபூர = மணிபூரக சக்கரம்
அந்தர் = உள்ளில்
உதிதா = எழுபவள்

# 101 மணிப்புராந்தருதிதா = மணிபூரக சக்கரத்தில் எழுபவள் (மணிபூரகம் தொப்புளுக்கு மேல் அமைதிருக்கிறது)

() க்ரந்தி = க்ரந்தி என்பது நாடிகளின் முடிச்சு
விஷ்ணு க்ரந்தி = மணிபூரகத்தின் தத்துவ தேவதா ஸ்வரூபமாக விஷ்ணு திகழ்கிறார்.
விபேதினி = உடைத்து - துளைத்து

# 102 விஷ்ணுக்ரந்தி விபேதினி = விஷ்ணுக்ரந்தி நாடி முடிச்சுத் தளைகளை உடைத்தெழுபவள் (யோக சாஸ்திரத்தின் படி, மணிபூரகத்திற்கும் அனாஹத சக்கரத்திற்கும் நடுவில் அமைந்திருப்பது விஷ்ணுக்ரந்தி)

() ஆக்ஞா சக்ரா = ஆக்ஞை சக்கரம்- ( நெற்றிக் கண் - ஞானக் கண் என்றும் சொல்லலாம்)
அந்தரால = நடுவே அமைந்த = இடைவெளியில் அமைந்த
ஸ்தா = இருத்தல்

# 103 அக்ஞா சக்ராந்தராலஸ்தா = ஆக்ஞா சக்கரத்தின் நடுவிலிருப்பவள் ( ஆக்ஞா சக்கரம் புருவ மத்தியின் பின் நிலைகொண்டிருப்பது)

() ருத்ர க்ரந்தி = ஆக்ஞை யின் தத்துவ விளக்க தேவதா ரூபமாக ருத்ரன் இருக்கிறார்
விபேதினி = துளைத்தல் - ஊடுருவு

# 104 ருத்ரக்ரந்தி விபேதினி = ருத்ரக்ரந்தி நாடி முடிச்சுத்தளைகளை ஊடுருவுபவள் (ருத்ரக்ரந்தி ஆக்ஞா சக்கரத்திற்கும் சஹஸ்ராரத்திற்கும் நடுவில் இருப்பதாக யோக நூல்கள் உரைக்கின்றன)

() சஹஸ்ரார = சஹஸ்ரார சக்கரம் 
அம்புஜா = தாமரை
ரூடா = ஏறு - எழுதல்

# 105 சஹஸ்ராராம்புஜாரூடா - சஹஸ்ரார பத்மத்தில் உயர்ந்தெழுபவள் (சஹஸ்ர சக்கரம் ஆயிரம் இதழ் கொண்ட கமலமாக உச்சந்தலையில் திகழ்வதாக விவரிக்கப்டுகிறது)

() சுதாசார = அமிர்த சொரிவு
வர்ஷ = மழை

# 106 சுதாசாரபிவர்ஷிணி = அம்ருத பிரவாகமாகப் பொழிபவள் .

***

குறிப்பு: சக்கரங்களும் நாடிக்ரந்திகளும் ஸ்தூலமானவை அல்ல. அவை சூக்ஷமானவை.
குண்டலினி அல்லது சக்கர யோக பயிற்சியை முறையான குருவிடமிருந்து கற்காமல் முயல்வது ஆபத்தானது.

இஷா யோகா வலைதளத்தில் குண்டலினியைப் பற்றி :::

சக்கரங்களைத் தூண்டுவதென்பது மிகவும் நுட்பமான ஒன்று. ஞானிகளாலேயே அது சாத்தியம். அடிப்படை சக்தி நிலையோடு விளையாடுவதால் அதனை எல்லாரும் செய்துவிட இயலாது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் சக்கரங்களைத் தூண்டுவது 
தொடர்பான ஏமாற்று வேலை ஏராளமாக நடைபெறுகிறது. குண்டலினியை எழுப்புவது பற்றியும், நிறைய புத்தகங்கள் வந்து விட்டன.  ஆத்ம சாதனைகளை, ஆன்மீகப் பயிற்சிகளை இடையறாமல் செய்து வந்தாலே சக்தி நிலை இயல்பாக மேலெழும்பும். ஆன்மீகப் பயிற்சிகள் உரிய முதிர்ச்சி அடையும் போது சக்தி நிலை மேலெழும்புமே தவிர சக்கரங்களைத் தனித்தனியாகத் தூண்டுவதும் நல்லதல்ல.


Lalitha Sahasranama (97- 106)



Mantra Roopam

SamayanthaHstha;
samayachara thathpara;
mooladharaika nilaya;
Brahmagranthi vibhedini;
Manipoorantharudhitha;
vishnugranthi vibhedini;
agna chakra-antharalastha;
Rudhragranthi vibhedini;
Sahasraara-ambhujarooda;
Sudhasaraabhi varshini;

() Samaya = samaya doctrines or practices
anthaHstha = resides in - present amidst

# SamayanthaHstha = She who exists in samaya worship and practices. (Samaya and Kaula are basic divisions of 'Shaktha worship' ie. shakthism where principle deity is Goddess parashakthi)

() Samaya = samaya doctrines
achara = customs and traditions
thathpara = is fond of - keen on

# Samayaacharathathpara = One who is passionate about samaya worship

() mooladhar = root chakra 
nilaya = abode

# moolaadharaika nilaya = She who dwells in mooladhara or root chakra
(Mooladhara chakra or root chakra located at the base of spine)

granthi = knot of a cord
Brahmagranthi = Knot above mooladhara that is understood to be presided by Brahma
vibhedin = to break through or pierce or destroy

 # Brahmagranthi vibhedini = She who breaks the ties of brahmagranthi (knot between 
mooladhara and swadhistana according to yogic tradition)

() Manipoora = manipooraka chakra (which is located in the navel) 
anthar = inside
udhith = to rise

# Manipoora-andhar-udhitha = She who ascends in manipoora-chakra

Vishnugrandhi = granthi is tie or knot
Vishnugranthi = knot which is ruled by Vishnu
vibhEdin = to break through or pierce

# Vishnugranthi vibhedhini = Who breaks across Vishnugranthi (knot between manipoora and anahata according to yogic tradition)

Agna chakra - Agna chakra situated behnd the eyebrow centre (like the third eye) 
antharala = located in between - located in mid-way - intermediate space
stha = exist

# Agnachakra-anthara-lastha = She who exists in center of agna chakra (Agna chakra is situated behind the eyebrow centre)

Rudhragranthi = granthi is tie or knot, that which is presided by Shiva
vibheddhini = breaks through

Rudhragranthi vibhEdhini = Who pierces rudhragranthi (knot between agna chakra and sahasrara according to yogic tradition)

() Sahasrara = Sahasrara chakra or crown chakra situated in the crown of the head
ambuja = lotus 
rooda = mounted - ascended


# Sahasrara-ambuja-rooda = She who is ascended to Sahsrara chakra (This chakra is 
detailed with Thousand petalled lotus situated at the crown)

() sudhasara = shwer of ambrosia or nector of immortality (amruth) 
varsha = rain

# Sudhasaarabhi varshini = Who flows as nectar of immortality

***

Note: Chakras and energy knots are subtle in nature.

Thanks and Credits: Sanskritdictionary, spoken sanskrit, manblunder.com

Word of caution: Do not indulge in activating kundalini or chakras without proper  guru or guidance.

About Kundalini from Ishayoga website:::
Similarly with Kundalini Yoga, it is the most potent and it is the most dangerous. Without the necessary preparation, without constant, expert guidance and observation, no one should ever attempt it. But the problem is books have been written about it and everybody wants to do the highest yoga. This attitude itself is dangerous.



No comments:

Post a Comment