August 10, 2015

ஆழ்வார்கள் - பகுதி 4 (பூதத்தாழ்வார்)






முதல் மூன்று ஆழ்வார்களுள் இரண்டாம் ஆழ்வாராக போற்றப்படுபவர் பூதத்தாழ்வார். இவரும் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மஹான். மூன்று ஆழ்வார்களும் ஒரே காலத்தவர். ஒருவரை ஒருவர் பாராமலே, திருக்கோவிலூரில் ஒன்றாகப் இறைவனின் வடிவழகைக் கண்டு பாடல்கள் பாடி, முறையே திருவந்தாதிகளாக அருளிச் சென்றனர். 
.

அவிட்ட நட்சட்திரத்தில், பல்லவ ராஜ்ஜியத்திலன் பகுதியான மாமல்லபுரத்தில் பிறந்த பூதத்தாழ்வார், கௌமோதகி என்னும் கதையின் பிறப்பம்சமாக வணங்கப்படுகிறார். ஸ்தலசயனப் பெருமாள் கோவிலின் அருகில் குருக்கத்தி என்னும் மாதவி மலரில் அவதரித்தாக சான்றுகள் கூறுகின்றன. கடல்மல்லை என்று குறிப்பிடப்படும் தொண்டைநாட்டு நகரம் இவரது அவதாரப் பெருமையை சுமந்துரைக்கிறது. 
.

பூதத்தாழ்வார் அருளியது இரண்டாம் திருவந்தாதி ஏறக்குறைய நூறு பாடல்கள் நிரம்பப்பெற்றது. திருக்கோவிலூரில் எம்பெருமான் அழகில் மயங்கி பக்திப் பெருக்கில் வெளிப்படுகிறது. பொய்கை ஆழ்வாரைத் தொடர்ந்து, இவரது பாசுரம். 
.
அன்பே தகளிய ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானச் தமிழ் புரிந்த நான் 
.
எனப் பாடிப் போற்றுகிறார்.
.
.அன்பையே விளக்காக்கினும் போதவில்லை போலும். அன்பை அகழியாக்கிவிடுகிறார். பெரும் அன்பை அகழியில் வழியவிட்டு இறைவன் பால் உள்ள ஆர்வத்தையே நெய்யாய் உருக்கி, அவர்பால் இன்புற்று உருகும் அறிவை-சிந்தையை, திரியாக்கி, ஞானம் எனும் சுடர் விளக்கை நாரணனுக்கு ஞானத் தமிழின் துணை கொண்டு ஏற்றுகிறார்.
.
.
(மேலும் பார்ப்போம்)
.

2 comments:

  1. /ஸ்தலசயனப் பெருமாள் கோவிலின் அருகில் குருக்கத்தி என்னும் மாதவி மலரில் அவதரித்தாக சான்றுகள் கூறுகின்றன./ இப்படிப் பொத்தாம் பொதுவாகக் கூறுவதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தாய் தந்தையர் பெயர் தெரியாவிட்டால் அதற்கும் ஒரு புனைவா. தொடர்கிறேன்

    ReplyDelete
  2. Varugai ku nandri gmb sir.

    I contemplate it this way. They were graced not to be born in the womb of a human. They just happened to be found, like how Mother Sita was found by Janaka. Thats why they are referred as A-yonija (not born out of womb)

    Well, is it possible? I think we have few knowledge of what is possible in creation and what is not. I dont deny that ur perception can also be true.

    தொடருங்கள் . மகிழ்ச்சி :)

    ReplyDelete