March 18, 2015

பிம்பங்கள்





நிலையாமையின் நிஜம்தன்னை
அறிவிக்கும் நிலைக்கண்ணடித்
தருணங்கள்.
^
நயமாய் உரைத்து
நிகழும்
உடல் பரிணாமத்தை
உரித்தே காட்டிடும்.
^
சுருக்கமாய் உணர்த்தும்,
உடலின் நிலைதன்னை...
நாளும் பலகிளைகள்
தாவிப் பரிதவிக்கும் மனம்தன்னை,
அகத்தின் எழில்தன்னை.
^
சேர்த்தே சேமித்து
ஒளியூட்டி கொக்கரிக்கும்
வண்ணத்தின் தொலைந்த
ஸ்ருங்காரங்கள்
எண்ணத்தின் சுருங்கிய
பிரதிபலிப்புகள்
அல்லது மலரென மலர்ந்த
முதிர்ச்சிக் கோடுகள்.


-ஷக்திப்ரபா-

5 comments:

  1. ’பிம்பங்கள்’ ஒவ்வொரு வரிகளிலும் பிரதிபலித்துள்ளது அழகோ அழகு !

    தேர்ந்தெடுத்துள்ள படமும் சூப்பர். பகிர்வுக்குப் பாராட்டுக்கள் + நன்றிகள்.

    ReplyDelete
  2. நீண்ட இடைவெளிக்குப்பின் உங்கள் பதிவு காணமகிழ்ச்சியாக இருக்கிறது. நலம்தானே. கண்ணாடியில் பிம்பம் கண்டு நான் எழுதிய பதிவின் சுட்டி கீழே. முடிந்தால் வருகை தந்து படித்துக் கருத்திடுங்கள் நன்றி
    http://gmbat1649.blogspot.in/2012/07/blog-post_29.html

    ReplyDelete